அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பூச்சியமாக்க யோசனை
அமெரிக்காவுடன் இருக்கும் வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்கவரி பூச்சியமாக குறைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை அமெரிக்காவுடன் நமக்கு பெரிதாக வர்த்தக சிக்கல்கள் இருந்ததில்லை. அமெரிக்காவுக்கு நன்றி கூற வேண்டும். ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்பின் அரசியல் போக்கினால் சில சிக்கல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில், நாங்கள் இறக்குமதி செய்யும் அளவு அதிகமாக காணப்படுவதாகவும் அந்தப் பொருட்களை வேறும் நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வுகளை எட்ட முயற்சிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தாம் கடந்த மார்ச்சில் பாராளுமன்றத்தில் இதை கேள்வியாக எழுப்பியதாக தெரிவித்துள்ளார். இதன் போது ஆளும் கட்சியின் அனில் ஜயந்த இரண்டு மாதங்களில் பதிலளிப்பதாக கூறியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
சுங்க வரிக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், ஒரே நிலையான வரி கொள்கை பொருத்தமாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
