சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்த முக்கிய அதிகாரியிடம் விசாரணை

CID - Sri Lanka Police Sri Lanka Easter Attack Sri Lanka
By Dharu Apr 09, 2025 07:55 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகாரியிடம் சி.ஐ.டியினர்  விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் முன்னேற்றத்தைக் காட்ட அரசுக்கு உள்ள அரசியல் மற்றும் மத அழுத்தங்களுக்கு மத்தியில், இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

“சோனிக் சோனிக்” என்ற புனைப்பெயரில் சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி..! தனக்கு தெரிந்தவற்றை வெளியிடும் பிள்ளையான்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி..! தனக்கு தெரிந்தவற்றை வெளியிடும் பிள்ளையான்

ரவி செனவிரத்ன 

இந்த தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த மனுவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் பின்வறுமாறு செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை வழிநடத்திய ரவி செனவிரத்ன, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்“சோனிக் சோனிக்” என்பது முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி பண்டார என்று குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்த முக்கிய அதிகாரியிடம் விசாரணை | Investigate Into Key Official Behind Easterattacks

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

“சோனிக் சோனிக்” என்ற புனைப்பெயர் கொண்ட பண்டார என்று கூறப்படும் நபரை விசாரிக்க சி.ஐ.டி சென்றபோது, அப்போதைய ​​பிரதி பொலிஸ் மா அதிபரான சம்பத் லியனகே, மனுதாரரைத் தொடர்பு கொண்டு, பண்டாரவுக்கும், சஹரானுக்கும் உள்ள உறவு தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய ஒரு நடவடிக்கையின் இரகசிய பகுதியாகும் என்பதால், விசாரணையைத் தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், மனுதாரர் குறிப்பிட்ட அதிகாரியின் கோரிக்கையை மறுத்து, ஒரு வாக்குமூலத்தைப் பெற்றுள்ளார்.

பிள்ளையான் திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன...! பொலிஸார் வெளியிட்ட தகவல்

பிள்ளையான் திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன...! பொலிஸார் வெளியிட்ட தகவல்

பொலிஸ் புலனாய்வு அதிகாரி

ஆனால் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி பண்டார விசாரணை அறிக்கையில் முன்னதாக கூறிய நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் சஹாரானுடனான தனது உறவு குறித்து எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டார்” என்றுள்ளது.

சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்த முக்கிய அதிகாரியிடம் விசாரணை | Investigate Into Key Official Behind Easterattacks

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் ஓய்வு பெற்ற மூத்த பொலிஸ் அதிகாரி ரவி செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை வழிநடத்த மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர மீண்டும் பணியமர்த்தப்பட்டு விசாரணையை முன்னெடுக்க அழைக்கப்பட்டார்.

இந்த விசாரணையின் முக்கிய சாட்சியான சோனிக் சோனிக்கை விசாரணைக்காக முன்னிலைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

மைத்திரியை ஜனாதிபதியாக்க ரணில் கொடுத்த பணம்

மைத்திரியை ஜனாதிபதியாக்க ரணில் கொடுத்த பணம்

விசாரணைக்கான அழுத்தங்கள் 

இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் அதைத் தவிர்த்து வருகிறார்.

ஒரு முறை தனது பெயர் தவறு என்றும், ஒரு முறை வேறு சில காரணங்களைக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்த முக்கிய அதிகாரியிடம் விசாரணை | Investigate Into Key Official Behind Easterattacks

தற்போதைய அரசாங்கத்திலும் குறித்த விசாரணைக்காக சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சில எதிர்தரப்பு அரசியல்வாதிகள் தெரிவித்திருந்தனர்.

தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள ஆழமான வலையமைப்புக்கள் இந்த அரசாங்கத்திலும் செல்வாக்கு மிக்க பதவிகளை வகிக்கின்றனவா என்ற கேள்வி எழுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இறுதியாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலையீட்டிற்குப் பிறகு அவர் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, அதற்கு ISIS அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிய நபர் சோனிக் சோனிக் என்று அழைக்கப்படும் பண்டார என அடையாளம் காணப்பட்டார்.

சோனிக் சோனிக் தகவல்களை வெளிப்படுத்தினால், தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள புலனாய்வு அதிகாரிகளைக் கண்டுபிடிக்க முடியும் என நம்பப்படுகிறது.

அவர் மேலும் எந்த தகவலையும் வழங்கவில்லை என்றால், அவர் பெரும்பாலும் கைது செய்யப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US