யுத்த வடுக்கள் மறைந்து எல்லோர் வாழ்விலும் புதிய ஒளிக்கீற்றுக்கள் வீச வேண்டும்:ப.உதயராசா
உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தில், உலகில் பேரன்பும், மகிழ்ச்சியும் என்றும் தழைத்தோங்கிட வேண்டுமென்ற உயர் தத்துவத்தினை போதிக்கும் கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ மத சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள். அவர் பிறந்த இந்நாளில் அமைதியையும், சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும் கடைப்பிடித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
இயேசுபிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
கோவிட்
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் மக்களின் யுத்த
வடுக்கள் மறைந்து எல்லோர் வாழ்விலும் புதிய ஒளிக் கீற்றுக்கள் வீசி
நல்லெண்ணத்துடனும், ஒற்றுமையுடனும், பொருளாதார வளத்துடனும் வாழ இந்த நாள்
இனியதாக அமைய வேண்டும் என வேண்டுகின்றேன் என வாழ்த்துச் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam