ஹரின் பெர்னாண்டோவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சில் இன்று அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க உட்பட சிலருடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அவரது கட்சிக்குள் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையில் ஹரின் தலையிட்டால், அதுவும் ஜனாதிபதி மீது சுமத்தப்படும்.
இதனால், தயவு செய்து ஹரின் பெர்னாண்டோவுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு அமைய அவருக்கு பாதுகாப்பு அவசியம் என நாங்கள் நினைக்கின்றேன். ஹரின் பெர்னாண்டோவுக்கு பாதுகாப்பு வழங்கினால் பரவாயில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.