நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்படும் சமுர்த்தி திட்டங்கள்
சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (23) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நலிவுற்ற மக்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமுர்த்தி திட்டங்கள், பாரபட்சமின்றி நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஊடாக சுமார் ஐம்பது இலட்சம் வரையிலான கடன் வசதிகள் உட்பட பல்வேறு நன்மைகளை சமுர்த்திப் பயனாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று கிராமிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக சுமார் 250 இலட்சம் வரையிலான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, இந்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி, பருவ கால மீன் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் இறால், நண்டு, கடலட்டை ஆகியவற்றுக்கான பண்ணைகளை அமைத்தல் போன்ற நீர்வேளாண்மையில் முடிந்தளவு ஈடுபடுவதன் மூலம் நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பினை எமது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இதன்மூலம் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுக்
கொள்ள முடியும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் பூரணமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri