இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின்(Selvaraja Gajendran) கைதையும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தையும் கண்டிப்பதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் தொடர் போராட்டத்தின் 1681வது நாள் இன்று. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இறந்த நபரை நினைவுகூரும் வகையில் கற்பூரம் ஏற்றி வைத்திருந்தபோது அவரை கைது செய்ததைக் கண்டிக்கிறோம்.
இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அவரை கைது செய்தது ஒரு அடக்குமுறை. காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கான இறப்பு சான்றிதழை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நியூயோர்க்கில் கோட்டாபய ராஜபக்சே அதைப் பரிந்துரைத்தார்.
முதலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, உயிருடன் இருக்கும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க விசாரணை செய்யட்டும். பல சிறுவர்கள் அடிமைத் தொழிலாளர்களாகவும், தமிழ் பெண்கள் பாலியல் அடிமைகளாகவும் அனுப்பப்பட்டனர் என்பது அமெரிக்க அரசுத்துறை உட்பட அனைவருக்கும் தெரியும். இது அனைத்தும் தமிழ் துணை ஆயுதக் குழுக்களின் உதவியுடன் செய்யப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். மற்றும் அவர்களில் பாதிப் பேர் "பாதுகாப்பு வலயத்தை " விட்டு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தால் கையாளப்பட்டவர்கள்.
சர்வதேச அதிகாரிகளால் சரியான விசாரணை இல்லாமல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது ஐநா சாசனம் அல்லது சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். இலங்கையுடனான 74 வருடப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்காக இலங்கை பேச்சுவார்த்தை, நல்லிணக்கம், அரசியலமைப்பு சட்டசபை இவை யாவும் ஒரு அரசியல் மறைப்பாகப் பயன்படுத்துகிறது.
எனவே, தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையுடன் பேசுவதை நிறுத்தி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவைத் தமிழர்களுக்கு உதவ அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
