நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்
நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் நடைபெறுமா..
எனது அரசாங்கம் அமைதிக்காக போரை நடத்தியது.
நாட்டைப் பாதுகாக்க நாங்கள் போரை நடத்தினோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல.
எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது.
அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம்.
ஆனால், எங்கள் இராணுவம் அதில் வெற்றியும் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




