இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி
இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இனவாதிகள் கடுமையான பசியில் இருக்கின்றார்கள், எனினும் நாம் இனவாதத்திற்கு தீனி போடுவது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் சிங்கள இனவாதிகளுக்கு, தமிழ் இனவாதிகளுக்கு அல்லது முஸ்லிம் இனவாதிகளுக்கு சாப்பாடு போடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

இவர்கள் கடுமையான பசியினால் வாடுகின்றார்கள் இதனால் ஒவ்வொரு இடத்தையும் மோப்பம் பிடித்து மோப்பம் பிடித்து இவர்கள் அலைந்து திரிகின்றார்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு இல்லாத காரணத்தினால் இவர்கள் பிளாஸ்டிக் போன்றவற்றை கடித்து சாப்பிட முயற்சிக்கின்றார்கள், இதனால் பற்களுக்கே சேதம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எங்களிடம் இனவாதத்திற்கு சாப்பாடு இல்லை எனினும் தேசிய ஒற்றுமை குறித்த சாப்பாடு பூரணமாக உள்ளது, அது ஒரு சவாண் நிறையவே உங்களுக்கு வழங்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என அமைச்சர் பிமால் ரத்நாயக்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri