விடுதலைப்புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை விட அதிக சவால்களை எதிர்கொள்கின்றோம் - உதய கம்மன்பில
தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
மேலும், டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் என்றும், எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் 21 பில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டபோதும் அதில் எரிபொருளை இறக்குமதிக்கு 2.8 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri