ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது - ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப், "போர்நிறுத்தத்தின் அப்பட்டமான மீறல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அந்த மீறல்களில் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை அடங்கும் - இது உலகப் பொருளாதாரத்தை "பிணைக்கைதியாகப் பிடிப்பதற்கு" சமம் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தம்
ஈரானிய மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதே முன்னேறுவதற்கான ஒரே வழி.
காலிபாஃப் இந்த வாரம் பாகிஸ்தானில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கருதப்பட்டது - ஆனால் அவை இன்னும் தொடங்கவில்லை.

இன்றுடன் முடிவடைய இருந்த அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை நீடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை, ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தாங்கள் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.