தேவையான நிதியை கண்டுபிடிக்கவே ரணிலை இறக்கினோம்: மகிந்த பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு
அடுத்தாண்டுக்கான வருட வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சரியாகச் செய்தால் அடிமட்டத்தில் இருந்து செயற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்டத்தில் சில பாதகமான விடயங்கள் இருப்பதால், நல்ல விடயங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோது, “பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், அதற்கான அதிகாரத்தை வழங்கியவர்கள் நாங்கள்தான்” என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதுடன், கட்சியின் சிரேஷ்டர்கள் மத்தியில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
