சீனாவை கட்டுப்படுத்த வேண்டுமென இயங்கும் அமெரிக்கா: கஜேந்திரகுமார் கூறியுள்ள விடயம்

Sri Lanka Parliament Gajendrakumar Ponnambalam Sri Lanka United States of America
By Thileepan Feb 09, 2024 04:19 AM GMT
Report

பூகோள அரசியல் காரணமாக இலங்கைத் தீவை மையப்படுத்திய போட்டித்தன்மையிலே சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வையிலே அமெரிக்காவுடைய நிர்வாகம் இயங்குவதாக தாங்கள் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான 'சமர் அலி' மற்றும் 'லிகான் ஓமா' ஆகிய இருவருடனும், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான 'டொன் டேவிஸ்' என்பவருடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (09.02.2024) மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

முருங்கைக்காய், பச்சைமிளகாயின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

நல்லிணக்கம்

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கத்தேய நாடுகளுக்கும், இந்தியா போன்ற நாடுகளுக்கும் சார்பான ஒரு நபராக கருதப்படுகின்றதனாலும், இந்த வருடம் ஒரு தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினாலும்  இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மனித உரிமை மீறல்கள், சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயக கொள்கைகள் அனைத்ததையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சீனாவை கட்டுப்படுத்த வேண்டுமென இயங்கும் அமெரிக்கா: கஜேந்திரகுமார் கூறியுள்ள விடயம் | We Believe United States Operating Contain China

அந்த வகையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம், வரவிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றன நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் நிரந்தரமாக முடக்குவதற்குரிய சட்டங்களாக காணப்படுகின்றது.

இந்நிலையில், இனிவரப்போகும் உண்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த சட்ட விடயங்களையும் அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றி தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை அதிகரித்து சிங்கள பௌத்த இனவாத சக்திகள் மட்டத்தில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்தெடுத்து மக்களுடைய வாக்கு வங்கியை முழுமையாக கைப்பற்றி ஆட்சிக்கு வருவதற்கு முனைப்பு காட்டி வருகின்றார்.

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்

இலங்கையர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன்

மனித உரிமை

பூகோள அரசியல் காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்க மேற்கு சார்ந்த, இந்தியா சார்ந்த ஒரு விசுவாசியாக இருப்பதால் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் அரசு என்பன ரணில் விக்ரமசிங்க பாரதூரமான மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத செயற்பாடுகளை செய்கின்ற போதும், பெருமளவில் அதனை எதிர்க்காமல் அமைதியாக இருக்கின்ற தன்மை காணப்படுகின்றது.

ஆகவே, இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு செனட் சபையில் இருக்கக் கூடிய உறுப்பினர்களும் கீழ் சபையில் இருக்கக் கூடிய காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது குரலை எழுப்பி அழுத்தங்களை உருவாக்க வேண்டும்.

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

அவ்வாறு இன்றி இந்த நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது கடினமாக இருக்கும்.

எனினும், பொருளாதார ரீதியாக முழுமையாக இலங்கை மேற்கத்தைய நாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

சர்வதேச விசாரணை

ஆகவே இப்படிப்பட்ட விடயங்களுக்கு அமெரிக்காவில் இருக்கக் கூடிய நிர்வாகத்துக்கு முற்போக்குவாத சிந்தனையோடு செயற்படுகின்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற வகையில் இதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும் என்பதுடன் மிக அவசரமாக செய்யவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.

சீனாவை கட்டுப்படுத்த வேண்டுமென இயங்கும் அமெரிக்கா: கஜேந்திரகுமார் கூறியுள்ள விடயம் | We Believe United States Operating Contain China

அத்தோடு, எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய தமிழ்த் தேசத்தினுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக வலியுறுத்தி அமெரிக்க அரசு அங்கீகரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் முழுமையான சர்வதேச விசாரணையை நிலை நாட்டுவதற்கு நேரடியாக குற்றவியல் நீதிமன்றம் போன்ற விடயங்களை வலியுறுத்தி பொறுப்புக்கூறல் சம்பந்தமாக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அவர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டள்ளார்.

கொழும்பில் வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

கொழும்பில் வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியா வெளியிட்ட உளவுத் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியா வெளியிட்ட உளவுத் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US