லயன்ஸ் கழகத்துடன் இணைந்து மக்களுக்கு பணியாற்ற தயாராகவுள்ளோம் : கட்டளை தளபதி (Photos)
நம் மக்களுக்கு சேவை செய்ய மக்கள் நலன் சார்ந்த லயன்ஸ் கழகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட 231 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் டிலுப பண்டார தெரிவித்தார்.
மட்டக்ளப்பு லயன்ஸ் கழகத் வலயத் தலைவர் லயன் கே.லோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வான வாழைச்சேனையில் வசிக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றிக்கான வீட்டினை புணர்தாரனம் செய்து கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் வீட்டினை வாழைச்சேனை 77 'தோட்ஸ் போர் கோப்' அமைப்பு மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்களின் நிதி அனுசரணையுடன் இராணுவத்தினரின் கட்டுமான பணிகளுடன் புணர்தாரணம் செய்யப்பட்டு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
நாளந்தம் இடியப்பம் வியாபாரம் செய்து வந்த 4 குடும்ப அங்கத்தவர்களை கொண்டமைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்த வீடு அதன் கூரை மற்றும் கட்டத்தின் பல பாகங்கள் சேதமடைந்து வாழ முடியாதாபடி காணப்பட்டுள்ளது.
மழை காலங்களில் தரையில் உறங்கி நித்திரை கொள்ள முடியாமல் கதிரையில் இருந்து உறங்கி தங்களது வாழ்க்கையை நடாத்தி வந்துள்ளனர்.
இவர்களது அவல நிலமையினை அறிந்த 77'தோட்ஸ் போர் கோப்' அமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த முயற்சியினால் இவ்வாறனதொரு
நன்மையான செயற்பாடு நடந்தேறியுள்ளது.









