வங்கிக் கணக்கு தொடர்பில் விளக்கம் அளித்த பிரதி அமைச்சர் நளீன் ஹேவகே
தனது வங்கிக் கணக்கில் காணப்படும் பணம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பிரதி அமைச்சர் நளீன் ஹேவகே விளக்கம் அளித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த பின்னணியில் தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 22 லட்சம் ரூபாய் மற்றும் காணி தொடர்பிலான தகவல்கள் குறித்து நளின் ஹேவகே மனம் திறந்துள்ளார்.
தனது வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள 22 லட்சம் ரூபா தனது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் வழங்கிய பரிசுத்தொகைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் மக்கள் வழங்கிய பரிசுத்தொகை குறித்த ஆவணங்கள் தம்மிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எவரேனும் பார்க்க விரும்பினால் அதனை காண்பிக்க தயார் எனவும் அந்த வழங்கப்பட்ட தபால் உரைகள் கூட தம்மிடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே தாம் சொத்துக்களை குவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாசகர்கள் அல்ல எனவும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து அரசாங்க பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் பத்து பேர்சஸ் காணி ஒன்றை கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காணியை கொள்வனவு செய்யும் போது ஒரு பேர்சஸ் காணியின் விலை 25 ஆயிரம் ரூபாய் என அவர் தெரிவித்துள்ளார்.



