நாம் அநுர அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல! சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டு

Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka Government ITAK Parliament Election 2024 National People's Power - NPP
By Rakesh Nov 17, 2024 05:57 AM GMT
Report

நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரானவர்கள் அல்லது எதிர்ப்பானவர்கள் அல்லர்  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று (16) நடாத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று அவசரமாகக் கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

வவுனியாவில் இன்று அவசரமாகக் கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

உரிமை சார்ந்த எமது பயணம் 

மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி இருந்தபோது நாங்கள் ஆறு ஆசனங்களைப் பெற்றிருந்தோம்.

ஆனால், இப்போது தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட்டு எட்டு ஆசனங்களை அதுவும் பல்வேறு தரப்பினரின் எதிர்புகளுக்கு மத்தியில் பெற்றிருக்கின்றது.

நாம் அநுர அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல! சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டு | We Are Not Against Npp Gov Cvk Sivagnanam

எங்கள் கட்சிக்கு வாக்களித்த அத்தனை மக்களுக்கும் அதேபோல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.

எமது மக்களுடைய உரிமை சார்ந்த எமது பயணம் தொடரும். இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அலையாக அல்லது சுனாமியாக இந்த முறை வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

இந்தக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் கட்சியில் யாழ்ப்பாணத்திலும், ஏனைய இடங்களிலும் சிலர் தெரிவு செய்யப்பட்டும் உள்ளனர்.

மக்கள் ஆணை

ஆகவே, நாங்கள் கட்சி சார்ந்து அல்லது கொள்கை சார்ந்து சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் அநுர தரப்பினர் முன்னைய காலத்தில் 13 ஆவது திருத்தத்துக்கும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் போராடியவர்கள்.

ஆனால், இப்போது தமிழ் மக்கள் அதனை விரும்புவதாலும், புதிய அரசமைப்பைக் கொண்டு வரவுள்ளதாலும் அந்த முறைமை அப்படியே இருக்கட்டும் என்றவாறான மாற்றமொன்று அவர்களிடத்தே ஏற்பட்டிருக்கின்றது.

நாம் அநுர அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல! சி.வி.கே சிவஞானம் சுட்டிக்காட்டு | We Are Not Against Npp Gov Cvk Sivagnanam

நாங்கள் கேட்பது எங்கள் இனத்துவ அடையாளத்தை எங்களது தாயகத்தில் பேணிக் கொண்டு எங்களுடைய கருமங்களை நாங்களே நிர்வகிக்கக் கூடிய ஒரு கட்டமைப்பைத்தான் நாங்கள் கோரி நிற்கின்றோம்.

இந்த விடயத்தை உங்களுக்குச் சமர்ப்பித்து ஏற்கனவே மாகாண சபை விடயத்தை நீங்கள் மீளாய்வு செய்தது போல எங்களுடைய இந்தக் கோரிக்கையையும் மீளாய்வு செய்து தீர்வுகளை வழங்க வேண்டும்.

இப்போது உங்களுக்கு இருக்கின்ற ஆட்சிப் பலம், ஆதரவு பலம், மக்கள் பலம் என எல்லாப் பலத்தையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் ஆணையைப் பெற்ற நீங்கள் உங்கள் கொள்கையை மீளாய்வு செய்து தமிழ் மக்களையும் அணைத்துச் செல்லக் கூடியதாகப் பயணம் அமைய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

நிறைவுக்கு வரும் கற்றல் நடவடிக்கைககள்! உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நிறைவுக்கு வரும் கற்றல் நடவடிக்கைககள்! உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US