நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி: வத்தளை தொடக்கம் கொழும்பு வரை பதிவான காட்சி (Video)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது நாட்டு மக்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக எரிபொருள் நெருக்கடியானது தற்போது நாட்டை தானாகவே முடக்கத்திற்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
என்ற போதும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சகலருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களை நோக்கி வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அத்துடன் வேலைநாளான இன்றைய தினம் கூட வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டன.
அதன்படி இன்று காலை வத்தளை தொடக்கம் கொழும்பு வரையான வீதிப்பகுதிகளில் பதிவாகியுள்ள நிலைமை காணொளியாக,

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
