நீர்வழங்கல் சபையின் மொத்த விநியோகத்தில் ஏற்படும் பாரியளவு விரயம்
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) விநியோகித்த நீரில் சுமார் நான்கில் ஒரு பங்கு மூலம் வருமானம் ஈட்ட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் ஆறு மாதங்களில் வருமானமற்ற நீர் (Non-Revenue Water) 24.4 வீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 24.2 வீதமாக இருந்தது.
நீர்க்குழாய் கசிவுகள், சட்டவிரோத இணைப்புகள், நீர் மீட்டர் அளவீட்டுப் பிழைகள் ஆகியவை இதற்குக் காரணமாகும். நீர் இணைப்புகளின் எண்ணிக்கை 3.31 மில்லியனாக அதிகரித்துள்ளது.
சராசரிச் செலவு
அதேநேரம், நீர் வழங்கல் சபையின் வருமானம் 5.1 வீதம் அதிகரித்து 43.6 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. எனினும், நிகர இலாபம் 8.5 வீதம் குறைந்து 16.2 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

நீர் உற்பத்தி 440.8 மில்லியன் கனமீற்றராகவும், நீர் விற்பனை 333.5 மில்லியன் கனமீற்றராகவும் அதிகரித்துள்ளது. நீர் உற்பத்திக்கான சராசரிச் செலவு ஒரு கனமீற்றருக்கு 82 இலிருந்து 88 ரூபாயாக உயர்ந்துள்ளது.
முக்கியமாக: நீர் விநியோகம் அதிகரித்த போதிலும், கசிவுகள் மற்றும் கணக்கிடப்படாத நீர் விநியோகம் காரணமாக நீர் சபைக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சின் இடைக்கால நிதி அறிக்கை தெரிவிக்கிறது.