20 வருடங்களாக சுத்தம் செய்யப்படாத மருத்துவமனை நீர் தாங்கி கோபுரங்கள்
கடந்த 20 வருடங்களாக, மருத்துவமனையின் பிரதான நீர் தாங்கி கோபுரம் மற்றும் ஏனைய நீர் சேமிப்புத் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படவில்லை என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் ருகஸான் பெல்லன (Rukshan Bellana) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
மருத்துவமனையில் தற்போது பிரதான நீர் தாங்கி கோபுரம் உட்பட சுமார் 161 நீர் சேமிப்பு தொட்டிகள் உள்ளன.
ஆச்சரியப்படும் விதமாக, இந்த தொட்டிகளை சுத்தம் செய்யும் அட்டவணை அல்லது நிறுவல் திகதிகளை ஆவணப்படுத்தும் பதிவுகள் எதுவும் இல்லை.
அறுவை சிகிச்சை அரங்கு
நிலையான நெறிமுறைகளின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த நீர், நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் ஆய்வகங்களில் உணர்திறன் வாய்ந்த உபகரணங்களால் பயன்படுத்தப்படுகிறது.
எனவே இது உபகரணங்களின் சேதத்திற்கு வழிவகுக்கும்.
புறக்கணிக்கப்படும் கடைமைகள்
இந்த நிலைமைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவு என்ன செய்கின்றது என்று தெரியவில்லை.
மேலும் சிற்றறூழியர்கள் பாரம்பரியமாக செய்யும் பணிகள் உட்பட அவர்களின் வழக்கமான கடமைகளை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் சுத்தம் செய்ய மறுக்கிறார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |