கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் உயர்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கன மழை காரணமாக பிரமந்தனாறு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து ஒரு அடி 06 அங்குலம் வரை வான் பாய ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நடுத்தர நீர்ப்பாசனக் குளமான பிரமந்தனாறு குளம் 01 அடி 06 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.
எனவே குளத்தின் கீழ்ப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை 36 அடி நீர் மட்டத்தை கொண்ட பாரிய நீர்பாசனக் குளமான இரணை மடுக்குளத்தின் நீர் மட்டம் 35அடி 09 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.
26 அடி நீர் மட்டத்தை கொண்ட பாரிய நீர்பாசனக் குளமான கல் மடுக்குளத்தின் நீர் மட்டம் 25 அடி 08 அங்குலமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



