எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ள நீர்மட்டம் - விழிப்புடன் இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்
களுகங்கையின் கிளை ஆறான குடா ஓயாவின் நீர்மட்டம், தற்போது எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
களனி, கிங் மற்றும் நில்வளா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர்மட்டம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் தலைமைப் பொறியாளர் சமர யாப்பா ஆராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 4 மாவட்டங்களுக்கு நிலை 01இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாலிந்தனுவர, கண்டி மாவட்டத்தில் உள்ள தொலுவ, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அவ்வமுவ, மற்றும் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, அயகம, இரத்தினபுர, கொடகவெல, கலவன, மற்றும் நிவிதிகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri