மின்சாரம் தடைப்பட்டால் நீ்ர் விநியோகத்திலும் தடை ஏற்படும்! எச்சாிக்கை தகவல்
இலங்கை மின்சார சபையின் பணியாளா்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படுகின்ற மின்சாரத் தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால் நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணியின் அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து நீரேற்று நிலையங்களும், நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மின்சாரம் மூலமே இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், மின்சாரத் தடை ஏற்பட்டால், தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள மாற்று நடவடிக்கை இல்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
எனவே, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஏதேனும் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை (NWSDB) விரைவில் தனியார் மயமாக்கும் முயற்சி இடம்பெறும் என்பது தெளிவாகிறது என ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளாா்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
