இன்று பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம்
களுத்துறையின் பல பகுதிகளில் இன்று (10.06.2026) 10 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்சபை(NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி களுத்துறை, வடுவ, மத்துகம, பெருவளை, அலுத்கம மற்றும் பயாகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக
கெத்தேனா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோக இடையூறே இந்த நீர் வெட்டுக்கு காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காலி மாநகர சபை எல்லைக்குள் இன்று 14 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அப்பகுதிக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan