திருகோணமலையில் நீர் வெட்டு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும் 07.11.2024ஆம் திகதி அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை குடி நீர் விநியோகத் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம்,கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் இடம்பெறவுள்ளது.

நீர் சேமிப்பு
இதனால் முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan