போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்த கோரிக்கை !
போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் தொழிலை தொடர்ந்து நடத்துவது கடினமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சந்தையில் விற்கப்படும் போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர் சங்கங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நாடு முழுவதும் செயல்படும் உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி துஷார ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், குடிநீர் போத்தல்களின் விலை உயர்வு தொடர்பான தொழில்துறை சவால்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இதன்படி, தற்போது 70 ரூபாவிற்கு விற்கப்படும் 500 மில்லிலிட்டர் போத்தலை 90 ரூபாவாகவும், 100 ரூபாவிற்கு விற்கப்படும் 1 லிட்டர் போத்தலை 130 ரூபாவாகவும், 130 ரூபாவிற்கு விற்கப்படும் 1500 மில்லிலிட்டர் போத்தலை 160 ரூபாவாகவும், 5 லிட்டர் போத்தலை 350 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும் உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வின் காரணமாக அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது என மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சபுமல் குமார தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நுகர்வோர் விவகார சபை கவுன்சில் தலைவர் சட்டத்தரணி துஷார ரணதுங்க, துறைசார் அமைச்சரிடம் விவரங்களை சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam