நீர்க்கட்டணங்கள் தொடர்பில் எடுக்கப்பட உள்ள தீா்மானம்
எதிர்வரும் ஜூன் மாதம் நீர்க் கட்டணங்கள் தொடர்பில் தீா்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர் விநியோக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் இரண்டு தடவகைள் நீர்க் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதம் 30ம் திகதி நிலவும் நிலைமைகளை கருத்திக் கொண்டு விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை என்பனவற்றின் அடிப்படையில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.