நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்தோடு, டொலொஸ்பாகே (172.0 மி.மீ), நாவலப்பிட்டி (153.4 மி.மீ), ஹட்டன் (148.4 மி.மீ), கிதுல்கல (140.8 மி.மீ), ஹுனுகல் ஓயா (137.8 மி.மீ), கொட்டகலை (137.1 மி.மீ.), 137 மி.மீ. வெவெல்வத்த (112.4 மி.மீ) மற்றும் வலேபொட (101.2 மி.மீ.) ஆகிய இடங்களிலும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம்
மத்திய உயர்நிலப்பகுதிகள் மற்றும் இரத்தினபுரி, கேகாலை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நிலச்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.