கழிவு முகாமைத்துவமின்மையால் பாதிப்படைந்துள்ள மானிப்பாய் மக்கள்
யாழ். மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் சில மக்களின் கருத்துக்கள் அமைந்திருந்தது.
நீரோடும் கால்வாய்களும் சீராக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மழைவெள்ளம் தேங்கி நிற்கின்றது என மக்கள் தமது குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொதுமக்கள்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |