கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள்! வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Theepan Jul 31, 2026 08:15 AM GMT
Report

கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி வலி. வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் சுண்ணக்கல் அகழ்ந்தமையால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகளில் டிப்பர் வாகனங்களில் கழிவுகள் எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கொட்டப்பட்ட கழிவுகளை அங்கிருந்து மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்த நிலையில் , அண்மையில் அடையாளம் தெரியாத நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர்.

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

புகை மண்டலத்தால் சிரமம்

அது கடந்த இரண்டு நாட்களாக எரிந்து வந்தமையால், அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால், அயலவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

கழிவுகளை நேரில் பார்வையிட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போது, வலி. வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள பாரிய குழிகளுக்குள் கழிவுகள் உக்கி , மண் தன்மையில் காணப்படும் கழிவினை கொட்டுவதற்கு , வலி. தெற்கு பிரதேச சபை அனுமதி கோரியுள்ளதாகவும் , அதற்கு ஒரு டிப்பர் கழிவு மண்ணுக்கு 2500 ரூபாய் அறவிட தீர்மானித்து உள்ளதாகவும் , தவிசாளரால் எமக்கு அறிய தரப்பட்டது.

அப்போதே நாம் குறித்த கழிவுகள் உக்கிய மண்ணினை ஏற்றும் இடத்திலும் , அதனை பறிக்கும் இடத்திலும் கண்காணிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பின் அடிப்படையிலையே அவற்றை கொட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். தவிசாளரும் அதனை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த முதலாம் திகதி டிப்பர் வாகனங்களில் உக்காத கழிவுகளையும் இலத்திரனியல் கழிவுகள் , இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக உறுப்பினர்களுக்கு ஊரவர்கள் அறிவித்தனர்.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

அதன் அடிப்படையில் நேரில் வந்து பார்த்த வேளை டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு , எவ்வித கண்காணிப்புக்களும் இன்றி கண்ட இடங்களிலும் கொட்டி சென்றதனை அவதானித்து , தவிசாளருக்கு அறிவித்தோம். உடனடியாக தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மீண்டும் 10ஆம் திகதி வந்து பார்த்த போது பெருமளவான குப்பைகள் தேங்கி காணப்பட்டன. அது தொடர்பில் தவிசாளருக்கு தெரிவித்த போது , தான் குப்பைகளை கொட்ட அனுமதி கொடுக்கவில்லை.

குப்பைகள் கொட்டப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை

தனது அனுமதியின்றி குப்பைகள் கொட்டப்பட்டதாக கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அந்நிலையில் 16ஆம் திகதி சபையின் மாதாந்த கூட்டம் நடைபெற்றது. அதன் போது கட்சி பேதமின்றி கழிவு கொட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டோம். வலி. தெற்கு பிரதேச சபை கழிவுகளை கொண்டு வந்து கொட்ட கூடாது என்றும் , அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளி , வலி வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம்.

நாங்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் கழிவுகள் கொட்டப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் 27ஆம் திகதி இப்பகுதிக்கு நாம் வந்த போது டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. அதனை குழிகளுக்குள் கொட்ட விடாது தடுத்து நிறுத்தி இருந்தோம். எது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு அறிவித்தோம். அவர் நேரில் வந்து தன் அனுமதிகளை மீறி கழிவுகளை கொட்ட முடியாது என கூறி , நுழைவாயில்களை சங்கிலி பூட்டு போட்டு பூட்டியதுடன் , டிப்பர் வாகனங்களையும் திருப்பி அனுப்பி இருந்தார்.

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

அந்நிலையில் மறுநாள் 28ஆம் திகதி இனம் தெரியாத நபர்கள் நுழைவாயில் பூட்டுக்களை உடைத்து , நாம் மீள அள்ள கோரிய குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வந்தமையால் , அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் , அயலவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்தனர். அதானல் எமது தவிசாளரின் அனுமதியின்றி , அடாத்தாக எமது பிரதேச சபை ஆளுகைக்குள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபையினருக்கு எதிராக எமது தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US