யாழ்.பருத்தித்துறை நகர சபையால் கழிவுகளுக்கு வைக்கப்பட்ட தீ: பல தென்னம் கன்றுகள் நாசம்
யாழ்.பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளமையால் நூற்றுற்கு மேற்பட்ட தென்னம் பிள்ளைகளும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தீயில் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் குடத்தனை வலிக்கண்டிப்பகுதியில் வீதியால் செல்ல முடியாதளவு புகைமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது.
தீ பரவல்
தீப்பரம்பலும் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், தீவை அணைப்பதற்குரிய ஏந்தவித நடவடிக்கைகளும் சம்மந்தப்பட்ட எவராலும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையால் குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதா குடத்தனை கமக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.
வைக்கப்பட்ட தீ பல ஏக்கர் அளவில் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

