பொகவந்தலாவயில் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்
பொகவந்தலாவ - கெர்கஸ்வோல்ட் தோட்டத்தின் மேற்பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்களை குளவி தாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (14.05.2026) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த 5 பெண்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட மருத்துவ அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய கூறுகையில், காயமடைந்த பெண்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் காயம்
தோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது பருந்தொன்று தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த குளவிகள் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கியதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண்கள் தோட்ட நிர்வாகத்தின் நோயாளர் காவு வண்டியின் மூலம் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.


விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam