வசிம் தாஜுதீன் விவகாரத்தில் புதிய குழப்பம்.. மித்தெனிய கஜ்ஜாவின் மகன் வெளியிட்ட தகவல்!
2012ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் உயிரிழப்பதற்கு முன்னர், அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்தவர் தனது தந்தை அனுர விதானகமகே என்ற 'மித்தெனிய கஜ்ஜா' அல்ல என்று அவரின் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் நேற்று(01) கலந்துகொண்டு உரையாற்றியபோது பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த நபர் 'மித்தெனிய கஜ்ஜா'தான் என்று அவரது மனைவி அடையாளம் காட்டியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினர் மித்தெனிய கஜ்ஜாவின் 16 வயது மகன் இந்தக் கூற்றை மறுத்துள்ளார்.
உடல்வாகு
குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பத்தில் விசாரித்தபோது, தனது தாயார் குறித்த சிசிரீவி காட்சியில் உள்ள நபர் 'மித்தெனிய கஜ்ஜா' இல்லை என்று மறுத்ததாக மகன் தெரிவித்துள்ளார்.
எனினும், பின்னர் தன்னை விட்டுத் தனியறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாயார், எப்படித் திடீரென அடையாளம் காட்டினார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"CID என்னிடம் ஒரு காணொளியை காட்டி, 2012இல் இறந்தவருடன் தொடர்புடைய நபர் இவர்தானா என்று கேட்டபோது, 'அவருடைய உடல்வாகு என் தந்தையைப் போல் இல்லை.
புதிய குழப்பம்
என் தந்தை புகைபிடிக்கவோ மது அருந்தவோ மாட்டார். ஆனால் அதில் இருந்தவர் மது குடிக்கிறார்' என்று நான் கூறினேன்," என மகன் குறிப்பிட்டுள்ளார்.
'மித்தெனிய கஜ்ஜா'வின் முன்னாள் சாரதியுடன் தனது தாயார் முறையற்ற உறவில் இருந்ததால், தாய்க்கும் தனக்கும் இடையில் அந்நியம் உள்ளது என்றும், தாயார் தனது தந்தையின் மீதுள்ள வெறுப்பினால் வேண்டுமென்றே தவறாக அடையாளம் காட்டியிருக்கலாம் என்றும் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தாஜுதீனின் மரண வழக்கு விசாரணையில் புதிய குழப்பம் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
