அரிசி இறக்குமதிக்கான அனுமதி குறித்து வசந்த சமரசிங்க தகவல்
அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தனியார் வர்த்தகர்களுக்கு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
கால அவகாசம்
தற்போதைய நிலையில் சுமார் 84 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி அதன் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்படாது என்றும், அவ்வாறு வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri