காடு விசாரணை செய்யும் இடமா..! வசந்த முதலிகே கேள்வி
சிறைச்சாலையில் இருந்த தம்மை பொலிஸார் கொலை செய்ய திட்டமிட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்தனர். பிடியாணைக்கு அமைய கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் உத்தரவில் கையொப்பம் பெரும் வரை பொலிஸார் எவ்வாறு எம்மை கொலை செய்யலாம் என்று திட்டமிட்டனர்.
எவ்வாறு எம்மை முழந்தாளிட செய்யலாம் என திட்டம் தீட்டினர். நாம் பொலிஸ்மா அதிபரிடம் வினவுகிறோம், எம்மை விசாரணைக்காக கைது செய்தீர்கள் என்றால், நவகமுக ஆலயத்தில் உள்ள வாகன தரிப்பிடம் ஆலயத்தின் அருகில் உள்ள ஆறு கரையோர பொலிஸ் விடுதியின் கீழுள்ள கீழ் தட்டு எந்தரமுள்ள பொலிஸ் நிலையத்துக்கு பின்னால் உள்ள காடு என்பன விசாரணை புரிகின்ற இடங்களா என நாம் கேட்கின்றோம்.
பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் ASP ரத்நாயக்க விசாரணைகளை பொறுப்பேற்றார். பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் ASP ரத்நாயக்க என்பவர் ஆமி சுரங்க என்ற சந்தேகநபரை கைது செய்ததன் பின்னர் கொலை செய்த வழக்கின் முக்கிய பிரதிவாதியாவார்.
ஒருபக்கம் பேலியகொட விசேட பொலிஸ் பிரிவின் ASP மஹிந்த விலோஆரராச்சி மறுபுறம் ASP ரத்நாயக்க இவர்கள் இவ்வாறு செய்யும் போது பொலிஸில் உள்ள அன்பான சகோதர சகோதரிகள் எம்மை பாதுகாத்தனர்.
காடுகளில் எம்மை வைத்திருந்த போது அவர்கள் எம்மை பாதுகாத்தமையால் இன்று இப்படி உங்கள் முன்னிலையில் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri