பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதன்காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மழையுடன் ஈக்கள் போன்ற போன்றவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே இந்த நோய்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெங்கு நோய் பரவல்
அத்துடன் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு, உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு போன்ற டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri