தென் சீனக்கடலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்! தேடும் பணியில் போட்டி
தென் சீனக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்காவின் அதிநவீன போர் விமானம்,பல நாடுகளும் அதை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூ.எஸ்.எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட அதிநவீன போர் விமானம் எப்-35 தென் சீனக்கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.
அதிநவீன போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கத் தரப்பு கூறி உள்ளது. இதன் புதிய படங்களும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த விமானத்தின் மதிப்பு 10 கோடி அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ. 750 கோடி என்றும் கூறப்படுகின்றது.
கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனா மீட்பதற்கு முன், தான் மீட்க வேண்டும் என்று அமெரிக்கா போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கின்றதாக கூறப்படுகின்றது.
இந்த விலை உயர்ந்த போர் விமானத்தின் ரகசிய போர் தொழில்நுட்பங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
* இந்த போர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, தன்னிடமுள்ள தரவுகளைப் பகிரும் வலையமைப்பை கொண்டது.
* தாழ்வாகப் பறந்து கண்காணிக்கும் திறன் கொண்ட, விமானம் தாங்கிக் கப்பலில் இருந்தே புறப்பட்டு அதிலேயே தரையிறங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் முதல் விமானம்.
* பெரிய இறக்கைகள், அருமையான தரையிறங்கும் அமசங்களை கொண்டிருப்பதால், விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஏவும் முறையில் செலுத்த கச்சிதமாக ஏற்ற விமானம் இது.
* உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமான என்ஜினைக் கொண்டது. இந்த விமானம் மணிக்கு 1,200 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது.
* வெளியே இரு ஏவுகணைகள், உள்ளே நான்கு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.




