துறைமுக நகரில் முதலீடு செய்வது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்வது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் குறித்த சட்டம் குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலய்னா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர் அபிவிருத்தித்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என அமெரிக்க நிறுவனங்களிடம் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், கொழும்பு துறைமுக நகர் திட்ட சட்டம் அதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கரிசனை கொள்ள வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை முன்னெடுக்கும் சீன நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்வது ஆரோக்கியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பிலான நிபந்தனைகள் குறித்து முதலீடு செய்யும் நிறுவனவங்கள் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டத்தின் சில விடயங்கள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏனெனில், கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தில் சட்டவிரோத வர்த்தகம், நிதிச் சலவை செய்தல் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெறக்கூடிய சாத்திப்பாடுகள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களை தடுக்கப் போவதில்லை என்ற போதிலும் அதில் காணப்படும் விடயங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு அமெரிக்க மட்டுமன்றி ஏனைய நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துவதாக தூதுவர் டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.
இணைய வழியில் நடைபெற்ற வட்டமேசை மாநாடு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
