தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் பயணச்சீட்டு இன்றி சிலர் தொடருந்து நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொடருந்து நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவிட் தொற்று பரவிய காலத்தில் தொடருந்து பயணச்சீட்டுகள் முறையாகப் பரிசோதிக்கப்படவில்லை எனவும், இதனை வழக்கமாகக் கொண்டு தொடருந்து பயணிகள் தொடருந்து நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் காணப்படுவதாகவும் நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.
தொடருந்து பயண சீட்டு
பயணச்சீட்டு இன்றி தொடருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என ரயில்வே துணைப் பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயணிக்கும் பயணிகளை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan