கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு மக்கள் இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதிக்குள் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் போராட்டம்
மேலும், நாட்டில் 11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாட்டு மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் அவ்வாறு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
