வவுனியாவில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 20 பவுண் நகை கொள்ளை(Photos)
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று(26.09.2023) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமே இத்திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரிடம் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்படு அளிக்கப்பட்டள்ளது.
இதன் போது வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக தலைமையில் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் உள்ளடங்களைக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
