மட்டக்களப்பில் விபத்து : இரு இளைஞர்கள் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, சந்திவெளி பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள், மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25.09.2023) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை சுங்கான்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ், மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வடிவேல் தர்மராஜ் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில், சந்திவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இருவரை பொலிஸார் நிறத்துமாறு சைகைகாட்டிய போது நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிய போது வீதியில் எதிரே சென்ற கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
பிரேதப் பரிசோதனை
ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
