கொழும்பு, கம்பஹா மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை`
நாட்டில் டெங்குவின் புதிய மாறுபாடு ஒன்று பரவ ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு 3 என அடையாளப்படுத்தும் இந்த புதிய மாறுபாடு மூலம் நோய் அறிகுறிகள் மிகவும் வேகமாகி ஆபத்தை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு இந்த புதிய மாறுபாடு கடுமையாக பரவி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இதுவரையில் டெங்கு 2 மாறுபாடு மாத்திரமே பரவியது. எனினும் தற்போது டெங்கு 3 இலங்கையில் பரவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு நுளம்புகள் வேகமாக பரவுவதால், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசேட வைத்தியர் சுட்டிக்காட்டிள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 50 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan