E-8 விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka visa South Korea Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka
By Dhayani Oct 26, 2024 01:51 AM GMT
Report

தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில் பணிபுரிய அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த காலங்களில் தென் கொரியாவில் குறுகிய கால வேலைக்காக  E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை அனுப்புவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், குறுகிய கால வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவசியமானால், இலங்கை தென்கொரிய அரசுகளுடன் உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது.

மின்சார கட்டண குறைப்பு குறித்து வெளியான தகவல்

மின்சார கட்டண குறைப்பு குறித்து வெளியான தகவல்

 

E-8 விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை | Warning To Sri Lankans Regarding E 8 Visa Fraud

பெருந்தொகை பணமோசடி 

இந்த E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் பணிபுரிய தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதுடன் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறி பல்வேறு நபர்கள் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

E-8 விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை | Warning To Sri Lankans Regarding E 8 Visa Fraud

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலும், E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்களை தனியார் துறைக்கு அனுப்ப முடியாது என்றும் தென் கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைக்குச் செல்வதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் எனவே, E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுபவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.

எனவே பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கோ அல்லது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பணியகம் மேலும் கோரியுள்ளது.

இலங்கை பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்

சம்பந்தனின் உத்தியோகப்பூர்வ இல்லம் குறித்து அநுர அரசுக்கு மகள் கடிதம்

சம்பந்தனின் உத்தியோகப்பூர்வ இல்லம் குறித்து அநுர அரசுக்கு மகள் கடிதம்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US