தொழிலுக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போது போலி தரகர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணயகம், வெளிநாடு செல்லும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், பதிவு செய்யப்பட்ட உரிமதாரர்கள் மூலம் மாத்திரமே நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறான 800 உரிமம் பெற்ற முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் அழைத்து, அதற்கான ஆலோசனை மற்றும் சேவைகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan