பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நோய் பாதுகாப்பு
இந்த வைரஸின் தற்போதைய மாறுபாடு தீவிரமற்ற மாறுபாடாகும் என பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய சுகாதார நடவடிக்கைகள் குரங்கு அம்மை தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடைமுறையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்குள் நுழைகிறதா குரங்கு காய்ச்சல்?
தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பில் இலங்கை வைத்தியசாலை அமைப்பு மற்றும் வைத்தியர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக்கு வரும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அடையாளம் காண விமான நிலையத்தில் தயார்படுத்தல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.
விமான நிலையத்தில் குரங்கு அம்மை தொற்றின் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரோனாவை போல பாதிப்பு ஏற்படுத்துமா?
கொரோனா தொற்றுடன் ஒப்பிடும் போது இந்நோயின் பரவலானது ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாகவும், நெருங்கிய தொடர்பின் மூலம் இந்நோய் இலகுவாகப் பரவக்கூடியது எனவும் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொரோனாவை அடையாளம் காண பயன்படுத்தப்படும் வகையின் மரபணு பகுப்பாய்வு மூலம் நோயைக் கண்டறிய முடியும்.
குரங்கு அம்மை அறிகுறிகள்
குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறிகள் முகம், கைகள் மற்றும் கால்கள் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுவதுடன், வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் காய்ச்சல் காணப்படும்.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு தொற்றுநோய் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையிலும் பாதிப்பு
ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து இலங்கைக்கு பரவும் பெரியம்மை வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நோய் நாட்டில் பரவியுள்ளதா என்பதை கண்டறியும் மரபணு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் இருந்து இந்த நோய் பரவும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
சீழ் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும், அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுவது அவசியமானது எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.
தொண்ணூற்று இரண்டு குரங்கு அம்மை நோயாளர்கள் உலகளவில் பதிவாகியுள்ளனர், மேலும் இலங்கையில் இன்றுவரை எந்த நோயாளர்களும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
