முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம்:சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா
முல்லைத்தீவு - சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார்.
சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்விகள்,
1.சிறுமி குகநேசன் டினோஜா மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி மற்றும் நேரம்?
2.வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியரின் பெயர்,குழந்தைகள் வாட்டுக்கு மாற்றப்பட்ட நேரம்?
3.மேற்படி வைத்தியசாலையில் குழந்தைகள் வைத்திய நிபுணர் கடமையாற்றுகிறாரா?அவரின் பெயர்?
4.அவ்வாறு இல்லை என்றால் சிரேஷ்ட வைத்திய அதிகாரியின் பெயர், அன்று அவர் கடமையில் இருந்தாரா?
5.இந்த வைத்தியசாலை எந்த பிரிவுக்குள் அடங்குகிறது.பொறுப்பதிகாரியின் பெயர்?
சம்பவம் நடந்த அன்று அத்தியட்சகர் வைத்தியசாலையில் இருக்கவில்லை.கொழும்பில் இருந்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருந்துகள் அச்சந்தர்ப்பத்தில் இருந்த வைத்தியரால் ஆராயப்பட்டதா போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், முதல் மேற்கொண்ட பரிசோதனையின் அறிக்கை அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.அதை கொண்டு மேலதிக பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
வைத்தியசாலை ஊழியர்களால் மேற்கொண்ட தவறால் ஏற்பட்ட மரணம் என்ற அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam