அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகம் விசேட அறிவிப்பு
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் தொடர்பில் விசேட நடவடிக்கையை மேற்கொள்ள அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி அமெரிக்காவில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்தாக கூறப்படுகிறது.
எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோரும் இந்த புதிய விதிமுறைக்கு உள்வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
சட்டப்பூர்வ அந்தஸ்து
அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் வைத்திருக்கவேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற ட்ரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில்,
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கு இணங்கவில்லையென்றால் எந்த அடைக்கலமும் இருக்காது.
அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
30 நாட்களுக்குள் பதிவு
குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 11ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
தங்கள் முகவரியை மாற்றுபவர்களும் 10 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்.
தவறினால் அவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
