அடக்குமுறைகளை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்றமுடியாது: அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை
தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போதைய 18% VAT வரியை 20% - 21% ஆக அதிகரிக்க நேரிடும் என திறைசேரியின் செயலாளர் நாயகம் மகிந்த சிறீவர்தன தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகளை மேற்கொண்டு அவ்வாறான கோரிக்கையை நிறைவேற்றமுடியாது எனவும் கூறியுள்ளார்.
அரச தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது திறைசேரி செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினால், தற்போதுள்ள செலவினங்களுக்கு மேலதிகமாக வருடாந்தம் மேலும் 140 பில்லியன் ரூபாவும், சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் மேலும் 280 பில்லியன் ரூபாவும் தேவைப்படும் என திறைசேரி நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருமானத்தைக் கண்டறிய, தற்போதுள்ள வருமானத்தை அதிகபட்சமாக நிர்வகித்தாலும், வரிகளையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க, VAT வரி 2% அதிகரிக்க வேண்டும் என்றும் செயலாளர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |