தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு மலையக பகுதியிலும் ஆதரவு
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் முன்னெடுக்கப்படும் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாக மத்திய மலைநாட்டு பகுதியிலுள்ள தபாலக ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, இன்றைய தினம் (08.07.2024) நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் நானுஓயா (Nanuoya) பிரதான தபாலக ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, இவ்விரு பிரதான தபால் நிலையங்களிலும் கடித விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
சிரமத்தில் மக்கள்
அதேவேளை, கடித விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அலுவலகத்திற்கு சமூகமளிக்காமை காரணமாக தபால் நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri