வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் உடல்நிலை பாதிப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனாவின் வீட்டிற்கான மின் இணைப்பு மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகயீன விடுமுறையை பெற்றுள்ள நிலையில் இவ்வாறு உயர் அதிகாரிகளால் மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது உடல்நிலை சுகயீனமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரனவின் செயற்பாடு என அவர் முகப்புத்தக பதிவில் கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகள் சட்ட ஒழுங்குகளை அப்பாற்பட்டது எனவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் உயர் பொலிஸ் கண்காணிப்பாளரின் உதவியுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அவரின் முகப்புத்கபதிவில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
