கடலுக்கு செல்ல வேண்டாம்..! அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த வடமாகாண மீனவ பிரதிநிதி
மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கடற்றொழிலாளர்களுக்கு முன்னெச்சரிக்கை விடும் வகையில், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் கேட்டுக் கொண்டதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என வடமாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று(10.06.2026) வடமராட்சி கிழக்கில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் வறுமை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கடலில் வீசும் காற்றின் வேகம் குறைந்து விட்டது. பருவ காலங்களில் இதை விட வேகமாக காற்றும் வீசும். அப்போது எல்லாம் நாங்கள் கடலுக்கு சென்றிருக்கிறோம்.

இவ்வாறு கடற்றொழிலிற்க்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றமையால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்ககப்பட்டுள்ளது.
அதே சமயம், 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், அடிக்கடி காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.